வடக்குநோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு (சூடானிய நாவல்)
₹220.00
வடக்கு நோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு, நவீன அறபு இலக்கியத்தின் ஆறு சிறந்த நாவல்களுள் ஒன்று. - எட்வர்ட் சைத்
இந்நாவல் அறபியில் பிரசுரமான உடனேயே கிளாசிக்காக மாறிவிட்டது. தனது அழகியல் கூறுகளால் அறபு வாசகர்களைக் கிறங்கடித்தது. சிக்கலான அமைப்பு, கதை சொல்லும் ஆற்றல், மறக்கமுடியாத கதாபாத்திரங்கள், தீவிர உணர்ச்சிகளைக் கிளர்த்தும் வசீகர நடை, அழகிய பாடல் வரிகள், கடும் நகைச்சுவை, இயற்கை உணர்ச்சிகள், திகிலூட்டும் விசித்திரக் கனவுகள், சூடான் மக்களின் அன்றாடப் பேச்சு லயம், கவித்துவச் செறிவு, மரபுக் கவிதைகள், திருக்குர்ஆனின் உயரிய மொழிவழக்கு என அனைத்தையும் கொண்டுள்ளது. நாவலின் மொழிவீச்சும், மனோவசிய வர்ணனைகளும் அபாரமானவை.
ஒருவகையில், சமகால அறபு-ஆப்பிரிக்க சமூகங்களின் யதார்த்தத்தை வடிவமைக்க முயன்ற காலனித்துவத்தின் வன்முறை வரலாற்றையும் இது சித்தரிக்கிறது.
Quantity
Other Specifications
வடக்குநோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு (சூடானிய நாவல்)
நவீன அறபு கிளாசிக் நாவல்
Author: தையிப் ஸாலிஹ்
Translator: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்
Publisher: சீர்மை
No. of pages: 184
Add to cartPublished on: 2023
Book Format: Paperback
Category: நாவல், மொழிபெயர்ப்பு
Subject: பிற

