வான்குருவியின் கூடு - Vaankuruviyin koodu
₹140.00
பழந்தமிழ் இலக்கியத்தில் மிகச் செழுமையான பகுதி தனிப்பாடல்கள். வெவ்வேறு சூழல்களில் புலவர்கள் பாடியவை. இப்பாடல்கள் காட்டும் உலகம் பரந்தது. வள்ளல்கள், அரசர்கள், புலவர்கள் ஆகியோர் மட்டுமல்லாமல் குடிமக்களில் பல்வேறு தரப்பினர் இப்பாடல்களில் இடம்பெறுகின்றனர். தமிழ்நாட்டு வாழ்க்கை முறை விரிவாகப் பதிவாகியிருக்கிறது. எல்லாச் சுவைகளும் இருக்கின்றன. எழுத்து மொழியும் பேச்சு மொழியும் விரவி வருகின்றன. பாடல்களி ன் பின்னணி நிகழ்வுகள் சுவாரசியமானவை. இப்படிப்பட்ட தனிப்பாடல் தொகுப்பிலிருந்து தன் மனதுக்கு உகந்த சில பாடல்களைத் தேர்ந்தெடுத்து அனுபவத்தோடு இயைத்து விளக்கிச் செல்கிறார் பெருமாள்முருகன். பழந்தமிழ் இலக்கியத்திற்குள் நுழைவதற்குத் திறப்பை அமைத்துத் தரும் நூல் இது.
Quantity
Other Specifications
Author: பெருமாள் முருகன்
Publisher: காலச்சுவடு
Category: கட்டுரை
Subject: மொழி / மொழியியல்
Language: தமிழ்
Published on: 2021
Book Format: Paperback



