top of page

வைணவ இலக்கிய வகைகள் -Vainava ilakkiya vaikaigal

Price

₹390.00

தமிழ் இலக்கிய வகைமையில்  மடைமாற்றத்தை ஏற்படுத்தியவை பக்தி இலக்கியங்கள். குறிப்பாக ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்த பாசுரங்கள். இவை மரபுவழிப்பட்ட தமிழ் இலக்கிய வகைமையின் மூலக்கூறுகளோடு ஊடாடிப் புத்திலக்கிய வகைகளை உருவாக்கின.

இந்நூல், யாரும் எளிதில் அணுகத் தயங்குகின்ற வைணவ இலக்கிய வகைகளின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு ஆகியவற்றை விளக்கிப் பேசுகிறது. ஆழ்வார் பாசுரங்களில் இதுவரை கவனப்படுத்தப்படாத பகுதிகளில் புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது. திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள முழுமைபெற்ற இலக்கிய வகைகளோடு புதிய இலக்கிய வகைமையின் தோற்றத்திற்கான வேர்களையும் அடையாளங்காட்டுகிறது. வியாக்யானிகளின் செறிவுமிகுந்த உரைப்பகுதிகள் தகுந்த இடங்களில் பொருத்திக் காட்டப்பட்டுள்ளமை இதன் கூடுதல் சிறப்பு.

தமிழ் வைணவ இலக்கியத்தில் ஆழத்தோய்ந்த தமிழறிஞர் ம.பெ.சீ.யின் அரிய கொடை இந்நூல்.

Quantity

Other Specifications

Author: ம. பெ. சீனிவாசன்

Publisher: காலச்சுவடு

Category: ஆய்வறிக்கை

Subject: இலக்கியம்

Language: தமிழ்

ISBN: 9789361104688

Published on: 2024

Book Format: Paperback

bottom of page