யானைகளும் அரசர்களும் - Yaanaikalum arasarkalum
₹290.00
இந்த நூலில் ஆசிரியரின் கவனம் போர் யானைகளைப் பற்றியது.
காலாட்படை, குதிரைப்படை, தேர், இவற்றுடன் யானைப்படையும் ஒன்றாக இருந்தது. ஒரு காலகட்டத்தில் இந்திய மன்னனின் படையில் குதிரைகளைவிட யானைகள் மிகுந்திருந்தன. குதிரையை இறக்குமதி செய்தாக வேண்டும். ஆனால் முதிர்ந்த யானைகளைக் காட்டிலிருந்து பிடித்துக் கொண்டுவந்து பழக்கினார்கள்.
ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளாக யானைகள் ஆசியாவின் பல போர்க்களங்களிலும் இயங்கின. முற்றுகையிடுதலிலும் கோட்டைக் கொத்தளங்களைத் தாக்குவதிலும் யானைகள் முக்கியப் பங்காற்றின. அரசர்கள் யானையின் சிறப்பை உணர்ந்திருந்ததால் காடுகளைப் பாதுகாப்பதின் தேவையை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்கிறார் நூலாசிரியர். இந்தியாவிலிருந்து போர்யானை எவ்வாறு மேற்கு நாடுகளுக்கும், கிழக்கு நாடுகளுக்கும் பரவியது என்பதையும் டிரவுட்மன் விளக்குகிறார்.
Quantity
Other Specifications
Author: தாமஸ் டிரவுட்மன்
Translator: ப. ஜெகநாதன், தியடோர் பாஸ்கரன்
Publisher: காலச்சுவடு
Category: மொழிபெயர்ப்பு, வரலாறு
Subject: சூழலியல்
Language: தமிழ்
Published on: 2022
Book Format: Paperback



