top of page

மார்க்ஸின் கொடுங்கனவு - Marxin kodunkanavu

Price

₹350.00

மார்க்ஸியச் சிந்தாந்தத்தைப் பழுதறக் கற்றுத் தேர்ந்தவரும் தத்துவப் பேராசிரியருமான டெனிஸ் கொலன் ஆங்கிலத்திலளித்த நூலின் தமிழாக்கம் இந்நூல். கார்ல் மார்க்ஸ் கட்டமைத்திருக்கும் மார்க்ஸியச் சித்தாந்தத்தைப் பழமைவாதிகளிடமிருந்து விடுவித்து நவீனக் காலத்திற்கு ஏற்ற விதத்தில் அதில் மாற்றங்களைக் கொண்டுவருவதில் பெரும்பிடிப்புள்ள இவரது கட்டுரைகள் மார்க்ஸியம் பற்றிய மற்றொரு பரிமாணத்தைத் துலக்கமாக்குகிறது.
மானுட வாழ்க்கையில் உற்பத்தி, நுகர்வு என்னும் இரண்டைத் தவிர்த்துப் பிறவற்றைப் புறந்தள்ளிவிடும் முழுமுயற்சியில் முதலாளித்துவம் இறங்கியுள்ள இன்றையச் சமுதாயச் சூழல் குறித்தும் மார்க்ஸியச் சிந்தனைகள் மறுவாய்வு செய்யப்பட
வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகவும் அறிவுச் செழுமையுடனும் பொதியப்பட்டுள்ள இக்கட்டுரைகள் பயனுள்ள வகையிலான செறிவுமிக்க விவாதங்களை
உருவாக்கக்கூடியவை. மார்க்ஸியச் சித்தாந்தக் கோட்பாடுகளை விமர்சனப்பூர்வமாக அணுகும் அதே சமயத்தில் ஆக்கப்பூர்வமான ஒன்றாகவும் அவற்றை உள்வாங்கி மிளிர்கிறது இந்நூல்.

Quantity

Other Specifications

Author: டெனிஸ் கொலன்

Translator: நாகரத்தினம் கிருஷ்ணா

Publisher: காலச்சுவடு

No. of pages: 272

Category: கட்டுரை, மொழிபெயர்ப்பு

Subject: மார்க்சியம்

Language: தமிழ்

ISBN: 9789381969021

Published on: 2011

Book Format: Paperback

bottom of page