top of page

மூன்றாவது கண் - Moondravathu kan

Price

₹250.00

மொழிபெயர்ப்பில் பல கோட்பாடுகளும் அணுகுமுறைகளும் உள்ளன. கோட்பாட்டுப் புரிதலோ

பிரக்ஞைபூர்வமான அணுகுமுறையோ இல்லாமல் மொழியாக்கங்கள் உற்பத்தியாகும் களம்

தமிழிலக்கியச் சூழல். இந்தப் பின்புலத்தில்தான் ஜி. குப்புசாமி போன்ற விழிப்புணர்வுடைய அரிய

மொழிபெயர்ப்பாளர்கள் இயங்குகிறார்கள். இரு மொழிகளிலும் ஆழமான அறிவு, இரு

மொழிகளிலும் விரிவான, ஆழமான வாசிப்பு, மொழியாக்கக் கோட்பாடுகளைத் தீவிரமாகக்

கற்கும் முனைப்பு, மொழியாக்கம் தொடர்பான உலகளாவிய போக்குகள் குறித்த நெருக்கமான

அறிமுகம், மொழியாக்கச் சவால்களையும் சிக்கல்களையும் பேராவலோடு எதிர்கொள்ளும் சாகசம்

முதலான தகுதிகளுடன் மொழியாக்கம் செய்யும் வெகுசில மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர்

குப்புசாமி. மூல மொழியின் தொனியும் பண்பாட்டு, அரசியல் பின்புலங்களும் துல்லியமாகப்

பிரதிபலிக்கும்படி மொழியாக்கம் செய்யும் இவர், தான் மொழிபெயர்ப்பது பிற மொழி அறியாத

தமிழ் வாசகருக்காக என்னும் கவனத்தையும் கொண்டவர். மொழியாக்கப் பணிக்காகவே தன்

வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்துவரும் குப்புசாமி மொழியாக்கம் தொடர்பான தன்

கருத்துக்களையும் கற்றலையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார். மொழியாக்கம் குறித்த

நேரடி அனுபவத்தின் அடிப்படையிலான நூல் இதைப்போல வேறொன்று தமிழில் வந்ததில்லை.

மொழியாக்கத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் ஆர்வம் கொண்டவர்களும் மொழியில் பற்றுதல்

கொண்டவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

Quantity

Other Specifications

Author: ஜி . குப்புசாமி

Publisher: காலச்சுவடு

No. of pages: 200

Category: கட்டுரை, நேர்காணல்

Subject: மொழி / மொழியியல்

Language: தமிழ்

ISBN: 9788119034789

Published on: 2023

Book Format: Paperback

bottom of page