top of page

பாற்கடல், விடுத்தல், ராமராவணா - Paarkadal, Viduththal, Ramaravana

Price

₹125.00

கூத்துக் கலைஞர் பெருங்கட்டூர் ராஜகோபால், டச்சு நாட்டுச் சகோதரி ஹன்னா இருவரின் ஒருமித்தக் கூத்துக் கலைத் தேடலின் வேதியல் கிரியையில் பல கலைஞர்களை இணைத்து உருவாக்கிய கட்டைக்கூத்துச் சங்கத்தின் செயல்பாடுகளை வெளியுலகிற்குக் காட்ட மேற்கொண்டிருக்கும் எளிய முயற்சிதான் இந்நூல். கட்டைக்கூத்துக் குருகுலத்தில் பாடம் கற்கிற மாணவர்களுக்காய் திரு. ராஜகோபால் எழுதி நெறிப்படுத்திய, பாற்கடல், விடுத்தல் (தாகூரின் நாடகத்தைத் தழுவியது), ராமராவணா ஆகிய மூன்று புதிய கூத்துகளின் பனுவல்கள் இவை. புதுப்புதுப் பொருண்மைகளில், புதுப்புது அழகுகளில், புதுப்புது இளைஞர்களிடம், கூத்தும் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிற விதமாய்க் கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தையை அற்புதமாய் நிகழ்த்தியிருக்கிறது. புதிய அழகியலை நமக்குப் புரியவைக்கும் முயற்சி இந்நூல்!

Quantity

Other Specifications

Author: பெருங்கட்டூர் பொ. ராஜகோபால்

Publisher: காலச்சுவடு

No. of pages: 112

Category: நாடகம்

Language: தமிழ்

ISBN: 9789382033363

Published on: 2014

Book Format: Paperback

 
 
bottom of page