top of page

பாரதியும் ஜப்பானும் - Bharathiyum japanum

Price

₹230.00

இந்திய விடுதலைக்குப் போராடிய தலைவர்கள், சிந்தனையாளர்கள் பலரும் நவீன ஜப்பானை உணர்வும் எழுச்சியும் அளிக்கும் கிழக்கின் ஒளியாகக் கண்டனர். அவ்வகையில் வடக்கே தாகூரும் தமிழ்மண்ணில் பாரதியும் ஜப்பானைக் கொண்டாடினர்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னமே ஜப்பான் குறித்துத் தனித்தன்மையோடு பல எழுத்தோவியங்களைப் படைத்த முதல் தமிழ்ப் பேராளுமையாக மகாகவி பாரதி காட்சி தருகின்றார். பாரதியின் ஜப்பானிய தரிசனம் அரசியல், இலக்கியம், பண்பாடு, தொழில்நுட்பம் எனப் பன்முகம் வாய்ந்தது.

பாரதி எழுத்துலகின் ஜப்பான் தொடர்பிலான படைப்புகளை முதன்முறையாகத் திரட்டியளிக்கும் இந்நூல், உலகளாவிய பார்வை கொண்ட தமிழ்மண்ணின் முன்னோடி பாரதி என்பதை மற்றுமொரு பரிமாணத்தில் உணர்த்துகின்றது. பாரதியியலுக்கும், இந்தியா -  ஜப்பான் நாடுகளின், தமிழ் - ஜப்பானிய மொழிகளின் உறவு வரலாற்றுக்கும் வளம்சேர்க்கும் அரிய எழுத்தாவணத் தொகுதியை உருவாக்கியிருக்கிறார் பாரதி அறிஞர் ய. மணிகண்டன்.  

 

Quantity

Other Specifications

Editor: ய. மணிகண்டன்

Publisher: காலச்சுவடு

Categoryகட்டுரை

Language: தமிழ்

ISBN: 9789361103513

Published on: 2024

Book Format: Paperback

bottom of page