top of page

பாரதியும் குள்ளச்சாமியும் - Bharathiyum kullasamiyum

Price

₹135.00

ஞாயிற்றைச் சங்கிலியா லளக்க லாமோ?

ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?”

ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த லோகமானிய திலகர், விவேகானந்தப் பெருஞ்சுடரை முன்னெடுத்த நிவேதிதாதேவி ஆகியோர் மட்டுமல்ல, புதுச்சேரித் தெருக்களில் பித்தனைப் போல் திரிந்த ஒரு பரதேசியும் மகாகவி பாரதிக்கு ஞானகுரு. அவர்தான் குள்ளச்சாமி என்னும் மாங்கொட்டைச்சாமி. பாரதிக்கும் குள்ளச்சாமிக்குமான உறவு ஆழமானது; அற்புத நிகழ்வுகளின் அடுக்குகளைக் கொண்டது.

பாரதியின் நேரடி வாழ்வில், கவிதைகளில், உரைநடை எழுத்துகளில், சொற்பொழிவு நிகழ்ச்சியில் குள்ளச்சாமி பெற்றுள்ள இடம் தனித்துக் குறிப்பிடத்தக்கதாகும். இருவருக்குமான தொடர்பு வரலாற்றைத் துலக்கிக் காட்டும் இந்நூலைப் புதிய ஆவணங்களையும் அதிகாரபூர்வமான மூல ஏடுகளின் பதிவுகளையும் கொண்டு உருவாக்கியிருக்கிறார் பாரதி அறிஞர் ய. மணிகண்டன்.

Quantity

Other Specifications

Author: ய. மணிகண்டன்

Publisher: காலச்சுவடு

No. of pages: 104

Category: கட்டுரை

Subject: இலக்கியம்

Language: தமிழ்

ISBN: 9789355232342

Published on: 2023

Book Format: Paperback

bottom of page