நடுநிசி எல்லைகள்
₹460.00
‘உயரும், ஒளிரும் இந்தியா என்று திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிம்பத்தை தோலுரித்துக் காட்டும் சுசித்ரா விஜயன், அடிப்படைக் குடியுரிமைகளும், பெரிதும் பீற்றிக்கொள்ளப்படும் “மதச்சார்பற்ற ஜனநாயகத்தின்” நற்பேறுகளும் மறுக்கப்பட்ட நிலையில் வாழும் எல்லையோர மக்களின் சொல்லப்படாத, கவனத்தையீர்க்கும் கதைகளைப் பேசுகிறார். நாம் அறியாத இந்தியாவையும், பிரச்சினைகள் மிகுந்த அதன் எல்லைகள் வழியிலான தன் 9,000 மைல் பயணத்தையும், பாரபட்சமாக நடத்தப்படும் விளிம்புநிலை மக்களின் அன்றாட வாழ்வாதாரச் சிக்கல்களையும் நுண்ணுணர்வுமிக்க உணர்ச்சிபூர்வச் சித்தரிப்பின் மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார். தெளிவானதும் அணுக்கமானதுமான இந்நூல், தெற்காசியாவின் கடந்த-நிகழ்-எதிர் காலங்கள் மீது ஆர்வமுள்ள எவருக்கும் அவசியமான வாசிப்பு என்பேன்.’
— ஆயிஷா ஜலால், டஃப்ட்ஸ் பல்கலைக்கழகம்
Quantity
Other Specifications
நடுநிசி எல்லைகள்
நவீன இந்தியாவின் மக்கள் வரலாறு
Author: சுசித்ரா விஜயன்
Translator: ஞான. வித்யா
Publisher: சீர்மை
No. of pages: 344

