நீல மிடறு - Neela midaru
₹180.00
இலக்கியத்தில் முதலும் முடிவுமான கச்சாப்பொருளும் அதனை வனைந்து வார்த்தெடுக்கும்
களமும் மனித மனம்தான். அதன் ஆழத்துப் புதிர்களும் அவிழ்க்கவொண்ணா முடிச்சுகளும்
அடங்கியிருக்கும் இருள்வெளியினின்றும் துளியேனும் தொட்டெடுத்துத் துலக்கிக்
காட்டுவதில்தான் படைப்பின் பெறுமதி அடங்கியுள்ளது.
இத்தொகுப்பிலுள்ள லாவண்யா சுந்தரராஜனின் கதைகள் மனிதர்கள் பல்வேறு நிலைகளில்
உணரும் தனிமையை, உறவிற்காக அவர்கள் கொள்ளும் தவிப்பை, புறக்கணிப்பின் போதான
ஆற்றாமையை, அரவணைப்பில் கிடைக்கும் ஆறுதலை, இழந்த காதலை, இருப்பின்
கையறுநிலையை எனப் பல தருணங்களை ஆரவாரம் அதிகமில்லாத மொழியில் அடங்கிய
தொனியில் முன்வைக்கின்றன. மேலெழுந்த பார்வைக்குச் சலனமற்று நகர்வதுபோல் தோற்றம்
காட்டினும் ஆழத்தில் சில உள்ளோட்டங்கள் கொண்ட நதியைப்போல வாசிப்பின் போக்கில்
நம்மை மெல்ல உள்ளிழுத்துக்கொள்கின்றன இக்கதைகள்.
க. மோகனரங்கன்
Quantity
Other Specifications
Author: லாவண்யா சுந்தரராஜன்
Publisher: காலச்சுவடு
No. of pages: 144
Category: சிறுகதை
Language: தமிழ்
ISBN: 9788119034963
Published on: 2023
Book Format: Paperback