top of page

தொலைந்து போனவர்கள் - Tholainthu ponavargal

Price

₹200.00

பள்ளிக்கூடத்தில் ஒன்றாகப் படித்து முடித்துக் குடும்பம், வேலையென்று லௌகீக வாழ்வின்

நெருக்கடிகளில் சுழலும் நான்கு நண்பர்களின் கதைதான் ‘தொலைந்து போனவர்கள்’. இறுக்கிக்

கட்டப்பட்ட முடிச்சைச் சிறுகச் சிறுக அவிழ்ப்பதுபோல இந்நாவலின் கதாபாத்திரங்கள் தங்களது

நினைவுகளைக் கூறுகிறார்கள். . கந்தசாமி இந்த நாவலில் வாழ்க்கைப் பாதையைத் தேர்வு செய்ய

இயலாதவர்களையும் தோல்வியுற்றவர்களையும் வாழ்வின் துயரங்களை எதிர்த்து நின்று

கொள்ளப் போராடுபவர்களையும் கதாபாத்திரங்களாக்கியிருக்கிறார். பால்யகால நண்பர்கள்

நீண்ட காலத்திற்குப் பிறகு சந்தித்துக்கொண்டு தங்களை மீட்டுக்கொள்ளும் தருணங்களை

வெற்றுச் சம்பவங்களாகச் சித்தரிக்காமல் கலாபூர்வமான படைப்பாக மாற்றுகிறார் சா. கந்தசாமி.

சா. கந்தசாமியின் சிறந்த நாவல்களில் ஒன்றான இந்த நாவல், அரை நூற்றாண்டுக்குப் பிறகும்

சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரும் படைப்பாக மிளிர்கிறது.

Quantity

Other Specifications

Author: சா. கந்தசாமி

Publisher: காலச்சுவடு

No. of pages: 168

Category: நாவல்

Language: தமிழ்

Published on: 2023

Book Format: Paperback

bottom of page