top of page

சலபதி 50: தொடரும் பயணம் - Salapathy 50: Thodarum payanam

Price

₹225.00

நவீன தமிழ்நாட்டின் சமகால முக்கியச் சமூகவியல் ஆய்வறிஞர் ஆஇராவேங்கடாசலபதிக்கு (1967) 50 வயது நிறைவுற்றதையடுத்து, அவரது பங்களிப்புகள் குறித்து 2019இல் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் வாசிக்கப் பெற்ற 18 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்காலச்சுவடுஇந்து லிட் பார் லைஃப்கடவு ஆகிய அமைப்புகள் இணைந்து இரு நாள்கள் நிகழ்த்திய 'விரிவும் ஆழமும்என்ற தலைப்பிலான கருத்தரங்கில் சமகால அறிஞர்கள்படைப்பாளிகள் என ஏறக்குறைய 60 பேர் பங்களித்தனர்.

..சி., புதுமைப்பித்தன்பாரதி.வே.சா., பெரியார் போன்ற தமிழ்ப் பேராளுமைகள் பற்றிய ஆய்வுகள்பதிப்பு முயற்சிகள்இலக்கிய ஆக்கங்கள்நட்புப் பாராட்டல்ஆங்கிலப் படைப்புகள் எனப் பல்வேறு துறைகள் சார்ந்து 2018 வரையிலான சலபதியின் பணிகள் பற்றிய அறிமுகங்களும் மதிப்பீடுகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளனசிறிதும் மிகை தோன்றாப் பாராட்டுகளும்ஆழங்களில் புகுந்து புறப்பட்டு வந்த மதிப்பீடுகளும் கொண்டவிமர்சகரைப் பற்றிய விமர்சன நூல் இது.

Quantity

Other Specifications

Editor: பழ. அதியமான், ப . சரவணன், கிருஷ்ண பிரபு

Publisher: காலச்சுவடு

Category: கட்டுரை

Subject: இலக்கியம்

Language: தமிழ்

Published on: 2022

Book Format: Paperback

 
bottom of page