கய்த பூவு - Kaytha poovu
₹380.00
மலர்வதியின் கய்த பூவு, பெண்மீது நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமையை விவாதிக்கும் நாவல்.
பல்வேறு குடும்பங்களின் கிளைக்கதைகளுடன் பலதரப்பட்ட பெண்களின் கதைகளாக விரிகிறது
இந்த நாவல். குமரி வட்டாரத்தில் புழங்கும் சொற்கள் இந்நாவலுக்கு அழகிய வண்ணத்தைச்
சேர்க்கின்றன. சின்னஞ்சிறு வயதில் நடக்கும் விளையாட்டுத் திருமணத்தில் தொடங்குகிறது இந்த
நாவல். சுதனும் ரோசாவும் பால்ய காலத்திலிருந்து நட்புடன் வளர்ந்துவருகிறார்கள். பருவ
வயதைக் கடக்கும்போது சுதன் சுதந்திரமான காதலை, கட்டுப்பாடுகளற்ற பாலுறவை,
நிர்ப்பந்தமற்ற உறவுகளை விரும்பி வாழும் இன்றைய நவீன ஆணாக மாறி வளர்கிறான். ரோசா
அவனை மட்டும் விரும்பும் பெண்ணாக வளர்ந்திருக்கிறாள். இவ்விருவரின் வாழ்வை எதிரும்
புதிருமாக வைத்தபடி நகர்கிறது நாவல். பெண்ணின் திருமணத்தை, அதன் அரசியலை, சமூக
மதிப்பீடுகளை விரிவாகப் பேசும் மலர்வதி, ரோசா எனும் கதாபாத்திரம் மூலமாகக் குமரி நிலத்துப்
பெண்களின் அன்றாட வாழ்க்கைப்பாடுகளை அறியச்செய்கிறார். இது மலர்வதியின் ஐந்தாவது
நாவல்.
Quantity
Other Specifications
Author: மலர்வதி
Publisher: காலச்சுவடு
No. of pages: 304
Category: நாவல்
Language: தமிழ்
ISBN: 9788119034673
Published on: 2023
Book Format: Paperback



