கடவுள் தொடங்கிய இடம் - Kadavul thodangiya idam
₹220.00
போரின் நிமித்தம் புலம்பெயர்ந்து அகதியாகப் பல நாடுகள் கடந்து கடைசியில் கனடாவில் தஞ்சமடையும் பத்தொன்பதே வயதான நிஷாந் எனும் இளைஞனின் பார்வையில் விரியும் இந்நாவல் உலகெங்கிலும் அலைவுறும் மனிதர்களின் வாழ்க்கையைக் கழிவிரக்கமற்ற மெல்லிய நகையுணர்வுடன், தீவிரத்துடன் முன்வைக்கிறது.
சந்திரா மாமி, சகுந்தலா, ஈஸ்வரி, அம்பிகாபதி, அகல்யா என ஒவ்வொருவராக நிஷாந்தின் மன அறைக்குள் வந்து தங்கி அவரவர் கதைகளைக் கூறி மறைகின்றனர். எவ்வளவு துயரிலும் நிஷாந்துக்குக் காதலிக்கிற மனநிலை வாய்க்கிறது. நாவலெங்கும் கடவுச்சீட்டு ஒரு கதாபாத்திரமாகவே சுற்றிச் சுழல்கிறது.
அ. முத்துலிங்கம் என்கிற மகத்தான கதைசொல்லியின் மொழி லாவகத்தால் புலம்பெயர் நாவல்களின் வழக்கமான பாணியை உதறிவிட்டு இது வேறொரு ரூபம் கொள்கிறது.
கீரனூர் ஜாகிர்ராஜா
Quantity
Other Specifications
Author: அ.முத்துலிங்கம்
Publisher: காலச்சுவடு
Category: நாவல்
Language: தமிழ்
ISBN: 9788119034239
Published on: 2023
Book Format: Paperback



