top of page

கடவுளுக்குப் பின் - Kadavulukku pin

Price

₹130.00

இன்றைய நெருக்கடியான வாழ்வில் பெண்களின் இருப்பும் இருப்பிடமும் மாற்றமடைந்து

வருவதை இக்கதைகள் சித்தரிக்கின்றன. கிராம வாழ்வு தொடங்கி, நகர்ப்புறங்களில் உள்ள

பெண்களுக்கான விடுதிகள், புறநகர்ப் பகுதிகளில் தனித்த வீட்டில் கணவனின் வருகைக்காகக்

காத்திருக்கும் பெண்கள் என இக்கதைகளின் களம் விரிகிறது. நகரத்தின் நவீன வாழ்வு பெண்மீது

விரிக்கும் மாயவலையையும் கனவுக்கும் நிஜத்துக்கும் இடையில் பயணிக்கும் தருணங்களையும்

கதையாக்குகிறார் பொன்முகலி. அன்பின் போதாமைகளை, நியாயங்களை, துயரங்களை,

கோபங்களை தாய் - மகள், தந்தை - மகள் உறவுகள் வழியாகப் பேசும் கதைகள் இவை.

பாதுகாப்பான உடலுறவை வைத்துக்கொள்ளும்படி தன் பெண்ணுக்குச் சிபாரிசு செய்யும் தாய்,

மணமின்றி வாழ விரும்பும் பெண், உறவுச் சிக்கல் உளவியல் சிக்கலாகி அலைக்கழிக்கப்படும்

பெண் எனப் பல விதமானவர்களைப் பொன்முகலியின் கதையுலகில் காண முடிகிறது. இது

இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.

Quantity

Other Specifications

Author: பொன்முகலி

Publisher: காலச்சுவடு

No. of pages: 112

Categoryசிறுகதை

Language: தமிழ்

ISBN: 9788119034574

Published on: 2023

Book Format: Paperback

bottom of page