கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன? - Gothe enna solliyirunthal enna?
₹120.00
புதிய கதைகள் அருகிவரும் காலம் இது. சொல்லப்பட்ட கதைகளைத் தவிர்த்துப் புதிய கதைகள், புதிய களங்கள், புதிய கூறுமுறைகள் என நூதனப் பாய்ச்சலை நிகழ்த்துகிறது பெருந்தேவியின் புனைவுப் பிரவாகம். பின்நவீன வாழ்வைப் பின்நவீனத்துவ அழகியலுடன் அணுகுவதன் விளைவைப் பெருந்தேவியின் குறுங்கதைகளில் காண முடிகிறது. ஆழ்மனப் பிரக்ஞையின் பிம்பங்களும் மனவெளியின் இருள்மூலைகளும் நனவிலிப் படிமங்களும் யதார்த்தத்தின் புறவுருவில் வெளிப்படுகின்றன. சமகால வாழ்வையும் மனிதர்களையும் கற்பனைக்கும் எட்டாத மாற்றங்களையும் புனைவின் குதூகலத்துடன் துடிப்பான மொழியில் கதைகளாக்கித் தருகிறார் பெருந்தேவி.
ஒன்றரை வரிகளுக்குள் குறளை எழுதியது பெரிய சாதனை அல்ல. அந்த வரிகளுக்குள் கடலுக்கொப்பான உள்ளடக்கத்தைப் பொதிந்து தந்ததே வள்ளுவரின் சாதனை. அத்தகைய குறுகத் தரித்த கதைகளை இந்தத் தொகுப்பில் காணலாம். வாசிப்பின்பத்திற்குப் புதிய பரிமாணத்தைச் சேர்க்கும் பின்நவீனத்துவக் கதைகள் இவை.
Quantity
Other Specifications
Author: பெருந்தேவி
Publisher: காலச்சுவடு
Category: சிறுகதை
Language: தமிழ்
ISBN: 9789355231581
Published on: 2022
Book Format: Paperback



