top of page

ஒரு பெண்மணியின் கதை - Oru penmaniyin kathai

Price

₹110.00

அன்னி எர்னோ 2022ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். இந்நூலில் அவர்

1986 ஆம் ஆண்டு மரணமடைந்த தன் தாயை முன்னிறுத்துகிறார். விவசாயம், ஆலைத் தொழில்,

வியாபாரம் எனப் பல்வேறு தளங்களில் துடிப்புடனும், சமூக விழிப்புணர்வுடனும் செயல்பட்ட

அப்பெண்மணி வயதான காலத்தில் துரதிர்ஷ்டவசமாக ‘அல்சைமர்’ நோயினால் பாதிக்கப்பட்டு,

தன் நினைவுகளையும், கடந்துவந்த பாதையையும் மறந்துவிடுகிறாள்.

தன் வாழ்க்கையில் தடம் பதித்த தன் தாயை மறைவிலிருந்தும் மறதியிலிருந்தும் மீட்டெடுக்க

விழைகிறார் அன்னி எர்னோ. அவளது ஆளுமையை வெளிப்படுத்தும் அதேவேளையில் தனக்கும்

அவளுக்குமிடையே இருந்த பாசப் போராட்டத்தையும் பிணக்குகளையும் எடுத்துரைக்கிறார்.

தனிப்பட்ட ஒரு குடும்பத்தைக் காட்சிப்படுத்தும் இந்நூல் சமூகவியல் பார்வையில்

படைக்கப்பட்டிருப்பது சிறப்பாகும்.

Quantity

Other Specifications

Author: அன்னி எர்னோ

Translator: எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி

Publisher: காலச்சுவடு

No. of pages: 72

 

Categoryநாவல்மொழிபெயர்ப்பு

Language: தமிழ்

ISBN: 9788119034819

Published on: 2023

Book Format: Paperback

bottom of page