top of page

எம்.எல் - M.L

Price

₹190.00

-இந்தியாவில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் ஆயுதப் போராட்டமே தீர்வு என்னும் அணுகுமுறையை நம்பியவர் சாரு மஜூம்தார். அவரால் ஈர்க்கப்பட்ட பல இளைஞர்கள் அவரது இயக்கத்தில் இணைந்தார்கள். அப்படிச் சென்ற தமிழ் இளைஞர்கள் சிலரது வாழ்வை மையமாகக் கொண்ட நாவல் எம்.எல்.

தனிநபர்களின் வாழ்வைப் பின்தொடரும் இந்த நாவல் அதனூடே எம்.எல். சித்தாந்தத்தின் சாதக பாதகங்களை அலசுகிறது. பொதுவுடமைத் தத்துவத்தின் இன்றைய நிலை என்ன, அந்தத் தத்துவத்தை வரித்துக்கொண்ட நாடுகளின் நிலை என்ன என்ற கேள்விகளையும் எழுப்புகிறது.

நேரடி அனுபவங்களும் சித்தாந்தங்கள் சார்ந்த சிந்தனைகளும் இணையும் இந்த நாவல் தமிழின் நேரடியான அரசியல் நாவல்களில் ஒன்று. மிகையோ உணர்ச்சிப்பிசுக்கோ நாடகீயமான அம்சங்களோ இல்லாமல் யதார்த்தத்தில் காலூன்றி எழுதியுள்ளார் வண்ணநிலவன்.

Quantity

Other Specifications

Author: வண்ணநிலவன்

Publisher: காலச்சுவடு

 

Categoryநாவல்

Language: தமிழ்

ISBN: 9789361109768

Published on: 2025

Book Format: Paperback

bottom of page