உதய சூரியன் - Udhaya suriyan
₹175.00
சிறுகதை, நாவல்களில் சாதனைப் புகழ் ஈட்டிய தி. ஜானகிராமன் எழுதிய முதலாவது பயணக் கதை இது. அவரது தனித்துவமான கலைத் திறனால் முன்னுதாரணமற்ற பயண நூலாகவும் நிலைபெற்றிருக்கிறது. ஜப்பானில் தங்கியிருந்தும் பயணம் செய்தும் பெற்ற அனுபவங்களை தி. ஜானகிராமன், புனைகதைக்குரிய அழகுடனும் சுற்றுலாக் கையேட்டுக்குரிய நுட்பமான தகவல்களுடனும் இந்தக் கட்டுரைகளில் முன்வைக்கிறார். அந்த நாட்டின் இயற்கை வளத்தையும் பொருளாதார மேம்பாட்டையு ம் பண்பாட்டுப் பின்புலத்தையும் கலை மேன்மையையும் அந்த மண்ணின் மக்களை முன்னிருத்தியே விவரிக்கிறார். ஒரு பயணக் கதையை வாசக மனதை விட்டு அகலாத இலக்கியப் படைப்பாகத் தமது மந்திரச் சொற்களால் உருவாக்கியிருக்கிறார் தி. ஜானகிராமன்.
Quantity
Other Specifications
Author: தி. ஜானகிராமன்
Publisher: காலச்சுவடு
No. of pages: 128
Category: பயணக்குறிப்பு
Language: தமிழ்
ISBN: 9789355232564
Published on: 2023
Book Format: Paperback



