top of page

இஸ்லாமும் போதை ஒழிப்பும்

Price

₹275.00

மது உள்ளிட்ட போதைப் பொருட்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பது என்பது எல்லாச் சமூகங்களுக்கும் முன்னால் இருக்கிற மாபெரும் பிரச்சினையாகும். தனிமனித நடத்தை, ஆரோக்கியமான குடும்ப வாழ்வு, ஆக்கபூர்வமான சமூக வாழ்க்கை என எல்லாவற்றையும் பாதிக்கிற தலையாய விவகாரமாகவும் அது இருக்கிறது. இதனைத் தீர்ப்பதற்கு சட்ட ரீதியான தடைகள் முதல் உளவியல் சிகிச்சைகள் வரை பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அவை அனைத்தும் முற்றிலும் அல்லது பெருமளவில் தோல்வியில் முடிவதைக் கண்டு நிபுணர்கள் திகைத்துப் போயுள்ளனர்.

இந்நிலையில், இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறையைக் காட்டித் தந்ததோடு, வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளது இஸ்லாம் மட்டுமே என்பதை வெகுசிலர்தாம் மறுக்கக் கூடும். அந்த வகையில், இப்பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்களையும், அவற்றைத் தீர்ப்பதில் இஸ்லாம் கைக்கொண்ட ஆன்மிக, சமூக, உளவியல் அணுகுமுறையையும் விரிவாக ஆராய்ந்துள்ளது இந்தப் புத்தகம்

Quantity

Other Specifications

இஸ்லாமும் போதை ஒழிப்பும்

ஒரு சமூக உளவியல் ஆய்வு

Author: மாலிக் பத்ரி

Translator: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்

Publisher: சீர்மை

No. of pages: 212

Language: தமிழ்

Published on: 2023

Book Format: Paperback

Category: கட்டுரை, மொழிபெயர்ப்பு

Subject: இஸ்லாம் / முஸ்லிம்கள்

bottom of page