ஆரஞ்சுப் பழத்தோட்டம் - Orange pazhathottam
₹190.00
-“அமது அழுதால் அஜீஸும் அழுவான். அஜீஸ் சிரித்தால் அமது வும் சிரிப்பான்.”
இரட்டையர்களான அமதுவும் அஜீஸும் ஆரஞ்சுப் பழத்தோட்டத்தில் அவர்களது பெற்றோருடன் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் பிராந்தியத்தில் நடந்த போரின் விளைவாகவும், அவர்களது இல்லமான ஆரஞ்சுப் பழத்தோட்டத்திற்கு, அந்தப் பிராந்தியத்தின் தலைவர் சுலயதின் வருகையினாலும் அச்சகோதரர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறியது? போரினால் அவர்கள் இழந்தது அவர்களது தாத்தா பாட்டியை மட்டுமல்ல, அவர்களது நிம்மதியையும் குழந்தைப் பருவத்தையும்தான். சிதிலமடைந்த அவர்களது தாத்தா பாட்டியின் வீட்டிற்கு நடுவில் நின்றுகொண்டு அந்த இழப்பிற்குப் பழிவாங்க அச்சகோதரர்களில் ஒருவனை அனுப்ப சுலயது கேட்டபோது, அச்சிறுவர்களின் தந்தை ஜகத் எடுத்த முடிவு என்ன? போர், துரோகம், விதி, தியாகம், பாசம், குற்றவுணர்ச்சி என இவைகளின் கலவை இந்நூல். எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய போரின் பாதிப்புகளைப் பற்றிய கதை - ஆரஞ்சுப் பழத்தோட்டம்.
Quantity
Other Specifications
Author: லரி திராம்ப்லே
Translator: பா. ரஞ்சித் குமார்
Publisher: காலச்சுவடு
No. of pages: 144
Category: நாவல்
Language: தமிழ்
ISBN: 9789361104558
Published on: 2025
Book Format: Paperback



