அசோகவனம் அல்லது வேலிகளின் கதை - Asokavanam allathu velikalin kathai
₹300.00
வெவ்வேறு காலங்களில் தான் எழுதிய ஒரு நாவலின் பகுதிகளை மீண்டும் ஒருங்கிணைத்து முழுமைப்படுத்தியிருக்கிறார் சாந்தன். இந்தப் பகுதிகள் தன் மண்ணை விட்டகலாத ஒரு மனிதரின் தொடர்கதைகளாக
அமைந்திருப்பதால் இந்த மறு வடிவமைப்பு சாத்தியமாகியிருக்கிறது.
தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தம் சொந்த
அனுபவங்களினூடாக வெளிப்படுத்தும் –ஆசிரியர் சமநிலை வழுவாமல்
அதைச் செய்திருக்கிறார்.
ஒடுக்குமுறைகளால் வடிவமைக்கப்பட்ட ஈழத் தமிழ் வாழ்வின் அரை
நூற்றாண்டுக் கால அற்புதச் சித்தரிப்புகளை இந்தப் பிரதியில் காணலாம்.
சாந்தனின் பார்வை கூர்மையான அவதானிப்புகளைக் கொண்டிருந்தாலும்
தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளை இயல்பாகவே தவிர்த்துவிடுகிறது.
எந்த ஒரு பிரச்சினையையும் மக்கள் தரப்பில் நின்று அணுகுவது இவர்
கதைகளின் தனித்தன்மை
Quantity
Other Specifications
Author: சாந்தன்
Publisher: காலச்சுவடு
Category: நாவல்
Language: தமிழ்
ISBN: 9788119034116
Published on: 2023
Book Format: Paperback



