அகதியின் பேர்ளின் வாசல் - Agathiyin berlin vaasal
₹200.00
பிரிவினைக்குள்ளான ஜெர்மனியின் கிழக்கு பேர்ளினில் இறங்கி மேற்கு பேர்ளின் வழியாகப்
பல்வேறு தேசங்களுக்கும் புலம்பெயர்ந்த அகதிகளின் வாழ்வு குறித்த பிரதி இது. ஐரோப்பியப்
பெருநகரமொன்றிலிருந்து ஆரம்பிக்கும் நாவல் இலங்கை இனக்கலவரம், போர் ஆகியவற்றின்
இணைகோடாகப் பயணித்து நீண்ட அகதி வாழ்வையும் அதன் மூல காரணங்களையும் திக்கிறது.
அக, புறச் சிடுக்குகளுக்குள்ளால் அகதிகளின் அந்தர வாழ்வைக் கவனப்படுத்துகிறது. பிளவுபட்ட
ஜெர்மனியின் சிக்கலான நில அமைப்பையும் ‘போட்ஸ்டம்’ உடன்படிக்கையின் விளைவுகளையும்
குறித்து வரலாற்றுத் தகவல்கள், கதாபாத்திரங்களின் உரையாடல்கள், வர்ணனைகள் மூலம்
அகதிகளின் துயரமான வாழ்வைப் பேசுகிறது. அவர்களின் வருகையையொட்டி ஐரோப்பிய
முதலாளித்துவ நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, ஊதியக் குறைப்பு,
வேலைவாய்ப்பின்மைகள் ஆகியவற்றைப் புனைவில் மீட்டெடுத்து ஒரு காலத்தை வாசகர்முன்
திறந்துவைக்கிறது. அரசியல் தஞ்சம் கோரி அகதிகளாயும் பரிதாபத்துக்குரியவர்களாயும்
வந்திறங்கிய அவர்களின் துல்லியமற்ற, பதற்றமான அனுபவங்களையும் மேல்நாட்டுக்
கல்விமூலமாகப் பலாபலன் அடைந்தோர் வாழ்வையும் இப்பிரதியில் இணையாக வாசிக்க
முடியும். காலக்கண்ணாடியின் முன் நிர்வாணமான வாழ்வை மீட்டெடுக்க முயல்கிறது இந்நாவல்
Quantity
Other Specifications
Author: ஆசி. கந்தராஜா
Publisher: காலச்சுவடு
No. of pages: 160
Category: நாவல்
Language: தமிழ்
ISBN: 9788119034987
Published on: 2023
Book Format: Paperback



